ADDED : டிச 31, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொரப்பூர்: மொரப்பூர் நகர் பிரிவு மின்வாரிய அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்படுவதாக மொரப்பூர் உதவி பொறியாளர் சக்திமுருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடத்துார் கோட்டம், மொரப்பூர் உபகோட்டம், நகர் மொரப்பூர் பிரிவு அலுவலகம், மொரப்பூர்-தர்மபுரி சாலையில், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் வரும், ஜன., 2 முதல், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள ஊராட்சி அலுவலகத்திற்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.