/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மழையில் மரம் விழுந்து உடைந்த மின் கம்பம்
/
மழையில் மரம் விழுந்து உடைந்த மின் கம்பம்
ADDED : ஜூன் 16, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த உனிசேனஹள்ளியை சேர்ந்தவர் முருகன். விவ-சாயி. இவரது விவசாய நிலத்தில் தென்னை மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் மாலை
அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றுக்கு தென்னை மரங்கள் முறிந்து, வயலில் சென்ற மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின் கம்பங்கள் விவ-சாய நிலத்தில் சாய்ந்தன. கடத்துார் மின்வாரியத்தினர் உடனடி-யாக மின்சாரத்தை துண்டித்தனர். தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.