தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மரம் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதம்

மரம் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதம்

மரம் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதம்


ADDED : அக் 14, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2026 05:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி,:தர்மபுரி அருகே, ஒட்டபட்டி பகுதியில் மரம் விழுந்ததில் நான்கு மின் கம்பங்கள் சேதமடைந்தது. மின் வினியோகம் பாதிப்பால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தர்மபுரி அருகே, ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட டிரைவர்ஸ் காலனி தெருக்களில், 10க்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் உள்ளன. அப்பகுதி மக்கள் குப்பையை தொட்டியில் கொட்டாமல், மரங்கள் உள்ள இடங்களில் குப்பையை கொட்டி விட்டு செல்வது வழக்கம்.

அதனை பஞ்., நிர்வாகமும் முறையாக அப்புறப்படுத்தாமல், துாய்மை பணியாளர்கள் மூலம், குப்பைக்கு அப்படியே தீ வைத்து விட்டு சென்று வந்தனர்.

இதனால், ஒரு சில பழமையான மரங்கள் பலத்த சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு, 7:00 மணிக்கு சேதமடைந்திருந்த மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்ததில், அதே தெருவில் இருந்த, 4 மின் கம்பங்கள் அடுத்தடுத்து உடைந்து விழுந்தன. இதனால், அங்குள்ள 10க்கும் மேற்பட்ட தெருக்களுக்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட நீண்டநேர மின் துண்டிப்பால், அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us