ADDED : செப் 19, 2026 03:57 AM
பென்னாகரம்: தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னா-கரம் தாசில்தார் ஆபிஸ் முன் நேற்று ஆர்பாட்டம் நடந்தது. அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் காதர் தலைமை வகித்தார். சங்க மாநில சிறப்பு தலைவர் நஞ்சப்பன் உட்பட பலர் பேசினர்.
ஆர்பாட்டத்தில், 2006-வன நில உரிமை சட்-டத்தை தமிழகத்தில் முழுமையாக நடைமு-றைப்படுத்த வேண்டும். பூர்வீகமாக வனத்தில் வாழுகின்ற பழங்குடி மக்களை, சரணாலயம் என்ற பெயரில் வெளியேற்றும் முயற்சிகளை கைவிட வேண்டும். வனத்தையொட்டி வாழ்-கின்ற மக்களின் அடிப்படை உரிமைகளையும் கால்நடை மேய்ப்பதையும் தடை செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர்.இ. கம்யூ., கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராசன், மாவட்ட செயலாளர் கலைச்-செல்வம், பழங்குடி மக்கள் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், மாநிலக்குழு உறுப்பினர் மாதையன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
