ADDED : டிச 08, 2024 01:39 AM
தர்மபுரி, டிச. 8-
தர்மபுரி, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். பின், இக்கல்லுாரி மருத்துவர்கள் மற்றும் மாணவ, மாணவியர் காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, காசநோய் ஒழிப்பு குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காசநோய் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தி.மு.க., -
எம்.பி., மணி, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களான பென்னாகரம் ஜி.கே.மணி, தர்மபுரி வெங்கடேஸ்வரன், டி.ஆர்.ஓ., கவிதா, மருத்துவ இணை இயக்குனர் சாந்தி, சுகாதாரதுறை துணை இயக்குனர் ஜெயந்தி, காசநோய் பிரிவு துணை இயக்குனர் பாலசுப்பிரமணி, ஆர்.டி.ஓ., காயத்ரி உள்பட பலர் பங்கேற்றனர்.