/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் திங்கட்கிழமையில் மஞ்சள் ஏலம்
/
அரூர் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் திங்கட்கிழமையில் மஞ்சள் ஏலம்
அரூர் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் திங்கட்கிழமையில் மஞ்சள் ஏலம்
அரூர் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் திங்கட்கிழமையில் மஞ்சள் ஏலம்
ADDED : ஏப் 13, 2025 05:02 AM
அரூர்: அரூர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர் அறிவழகன் வெளிட்டுள்ள அறிக்கை: அரூர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வார வெள்ளிக்கிழமையில் மஞ்சள் ஏலம் நடந்தது.
சேலம், மஞ்சள் சந்தையில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் ஏலம் நடப்பதால், சேலம், ஆத்துார், ஈரோடு, ராசிபுரம் ஆகிய ஊர்களில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள், அரூர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மஞ்சள் ஏலத்தில் பங்கேற்பதில் சிரமம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, இனி வாரந்தோறும் அரூர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், திங்கட்கிழ-மையில் மஞ்சள் ஏலம் நடக்கும். இவ்வாறு, அதில் தெரிவித்-துள்ளார்.