/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டாஸ்மாக் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
/
டாஸ்மாக் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
டாஸ்மாக் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
டாஸ்மாக் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
ADDED : டிச 09, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடியை அடுத்த ஜாலியூரை சேர்ந்தவர் பெரியசாமி, 49; வடசந்தையூர் அரசு மதுபான கடை விற்பனையாளர். நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்தார். மது வாங்க வரிசையில் நின்றிருந்தவர்களை தள்ளி விட்டபடி, பொம்மிடி வினோபாஜி தெரு சச்சின்குமார், 26, பென்னாகரம், போடூர் கிராமம் கலையரசன், 25, வந்தனர்.
பெரியசாமியிடம், 'நாங்கள் ரவுடி, 1,000 ரூபாய் கொடு' என கேட்டபோது மறுத்துள்ளார். கோபமடைந்த இருவரும் ஆபாசமாக பேசி, கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பெரியசாமி புகாரின்படி இருவரையும் பொம்மிடி போலீசார் கைது செய்தனர்.