/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடிய இருவர் கைது
/
வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடிய இருவர் கைது
ADDED : ஆக 09, 2025 01:21 AM
கம்பைநல்லுார், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த மேஸ்திரிகொட்டாயை சேர்ந்தவர் வடிவேலன்,46. இவர், நேற்று முன்தினம் தோட்டத்தில் வேலை செய்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் அருகில் இருந்த தரைப்பாலத்தில் பைக் இருந்தது. மேலும், வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வடிவேலனும், அவரது மகனும் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, இரண்டு வாலிபர்கள் வீட்டில் பணத்தை திருடிக் கொண்டிருந்தனர்.
அவர்களை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பிடித்த வடிவேலன், கம்பைநல்லுார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் காரிமங்கலம் அடுத்த அவரைக்காரன்கொட்டாயை சேர்ந்த அஜீத்குமார், 29, சபரி, 29, என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, வீட்டில் திருடிய, 2,700 ரூபாயை பறிமுதல் செய்தனர்.