/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
படப்பள்ளியில் பட்டா வழங்க கோரி இரண்டு அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
/
படப்பள்ளியில் பட்டா வழங்க கோரி இரண்டு அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
படப்பள்ளியில் பட்டா வழங்க கோரி இரண்டு அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
படப்பள்ளியில் பட்டா வழங்க கோரி இரண்டு அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
ADDED : ஜன 03, 2026 07:34 AM

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி அம்-பேத்கர் நகரில், 75க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை சேர்ந்த, 67 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனாலும் முறையாக தாசில்தார் அலுவலகத்தில் பதிவிட-வில்லை. 'கண்டிசன்' பட்டா என்பதால் பட்டா, சிட்டா பெறமுடி-யாமல் இருந்து வந்துள்ளனர். பலமுறை முறையிட்டதன் விளை-வாக கடந்த, 2024ம் ஆண்டு, 67 பேருக்கும், 10 ஆண்டுகளுக்கு அரசு நிபந்தனைகளை உள்ளடக்கிய பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்த பட்டாவை வைத்து வங்கிகளில் கடன் பெற முடியாது என்-பதால், பட்டாவை ரத்து செய்து, நிரந்தர பட்டா வழங்க வேண்டு-மென கூறி, படப்பள்ளி வழியாக ஊத்தங்கரை செல்லக்கூடிய இரண்டு அரசு பஸ்களை மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை போலீசார் மற்றும் வருவாய் துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
இரண்டு பஸ்கள் சிறை
பிடிக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

