ADDED : ஆக 21, 2026 01:27 AM

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்-திரத்தை சேர்ந்தவர் அசோகன், 62. ஓய்வுபெற்ற சுகர் மில் ஊழியர். இவர் மனைவி சசிகலா, 52, வளையில் வியாபாரி. நகைக்கு ஆசைப்பட்டு இவரின் மருமகன் அஸ்லாம், 30, கடந்த, 15ல் அவரை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்றார். உடலை, தனியார் ஆம்புலன்சில் எடுத்துச் சென்று, திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி அருகே கல்குவாரியில் வீசி விட்டு தலைமறைவானார்.
இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் அஸ்லாம், ஆம்புலன்ஸ் டிரைவர் பூபாலன், 27, வெங்கடசமுத்திரத்தை சேர்ந்த நவீன், 26, ஆகியோரை கடந்த, 18ல் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அஸ்-லாமின் உறவினர்களான வாணியம்பாடியை சேர்ந்த சமியுல்லா, 25, வெங்கடசமுத்திரத்தை சேர்ந்த ஜாகீர், 22, ஆகிய இருவரை நேற்று கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
