/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி இருவர் சாவு
/
இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி இருவர் சாவு
ADDED : ஆக 06, 2025 01:25 AM
பென்னாகரம், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த முனியம்மாள், 57. இவர் நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு வீட்டின் அருகில் இருந்த, கம்பியில் துணியை காய வைத்தபோது, அதில் மின்சாரம் பாய்ந்ததால், முனியம்மாளை மின்சாரம் தாக்கியதில் பலியானார். பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த டிரைவர் மகேஷ்குமார், 21. இவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து, கரூர் மாவட்டத்திற்கு கரும்பு சக்கை லோடு ஏற்றி வந்தார். நேற்று காலை, 7:00 மணிக்கு பெங்களுரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம், பாளையம்புதுார் அருகே, லோடு சரிந்தததால், சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு, அதை சரிசெய்ய லாரி மீது ஏறினார். அப்போது, மேலே சென்ற மின் கம்பியில் உரசியதால், மின்சாரம் தாக்கி பலியானார் தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

