ADDED : ஜூன் 16, 2026 04:31 AM
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பாப்பநாயக்-கன்வலசையை சேர்ந்தவர் ராமசாமி, 56, விவ-சாயி; நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு டூவீலரில் அனுமன்தீர்த்தத்தில் உள்ள தனியார் பால் சேகரிப்பு மையத்தில் பால் ஊற்றி விட்டு வீட்டிற்கு வந்தார். பாப்பநாயக்கன்பட்டி - ஒட்டப்-பட்டி ரோட்டில், வந்தபோது அங்குள்ள டிரான்ஸ்-பார்மரில் மின்னல் தாக்கி தீப்பிடித்ததில் மின்-கம்பி அறுந்து சாலையில் விழுந்துள்ளது. இதை கவனிக்காமல் வந்தபோது டூவீலரில் மின்கம்பி பட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அரூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.
* இண்டூர் அடுத்த தளவாய்ஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னவன், 65. நேற்று முன்-தினம் காலை, 9:30 மணிக்கு வீட்டின் பின்புற-முள்ள மாட்டு கொட்டகைக்கு சென்றார். கொட்-டகையில் அறுந்து கிடந்த மின் ஒயரை கவனிக்-காமல் பிடித்தபோது, மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
