/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்து கல்லுாரி மாணவர் உட்பட இருவர் பலி

ADDED : ஆக 28, 2025 01:17 AM
காரிமங்கலம், காரிமங்கலம் அருகே, சாலையோர தடுப்புச்சுவரில் பைக் மோதி, கல்லுாரி மாணவர் உட்பட இருவர் பலியாகினர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், அருகே தும்பலஹள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர் கருணாகரன்,21; பெயின்டர். இவரது நண்பர் தொப்பையாறு மறுவாழ்வு மையத்தை சேர்ந்த சினேகசுதன்,19. இவர், தும்பலஹள்ளியில் உறவினர் வீட்டில் தங்கி, தர்மபுரி தனியார் கல்லுாரியில் வணிகவியல், 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம், 12:00 மணியளவில் இருவரும், கே.டி.எம்., பைக்கில், தொப்பூரில் இருந்து தும்பலஹள்ளி நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது, தர்மபுரி - -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பெரியாம்பட்டி பிரிவு சாலை அருகே, சாலையோர தடுப்புச் சுவரில் பைக் மோதியதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர். காரிமங்கலம் போலீசார் இருவரையும் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ
மனைக்கு, 108 அவசர கால ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு மாலை, 6:00 மணிக்கு இருவரும் உயிரிழந்தனர். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.