/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட இருவர் கைது
/
ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட இருவர் கைது
ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட இருவர் கைது
ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட இருவர் கைது
ADDED : ஜன 06, 2024 07:05 AM
தர்மபுரி : தர்மபுரி அருகே விவசாயியிடம், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, வி.ஏ.ஓ., உட்பட இருவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் மிட்டாநுாலஹள்ளியை அடுத்த பூசாலிக்கொட்டாயை சேர்ந்த விவசாயி கணேசமூர்த்தி, 35; தாத்தாவுக்கு சொந்தமான, 18 சென்ட் நில சிட்டாவில், தவறுதலாக கமலேஷ் என்பவரின் பெயர் சேர்க்கப்பட்டதை அறிந்து, அந்த பெயரை நீக்க, நுாலஹள்ளி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பெயரை நீக்க, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று, நுாலஹள்ளி வி.ஏ.ஓ., வெங்கடேசன் கேட்டுள்ளார்.
இதுகுறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் திட்டப்படி வி.ஏ.ஓ., வெங்கடேசனுக்கு, லஞ்சம் தர பணத்துடன், கணேசமூர்த்தி நேற்று சென்றார். வெங்கடேசன் கூறியதால், அங்கிருந்த தனியார் அலுவலர் அமுதா, 20 ஆயிரம் ரூபாயை பெற்றார். வளாகத்தில் மறைந்திருந்த தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார், அமுதா, 24, வெங்கடேசன், 35, ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர்.