/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டூ -- வீலர் - கார் மோதி விபத்து தாத்தா பலி; பேரன் படுகாயம்
/
டூ -- வீலர் - கார் மோதி விபத்து தாத்தா பலி; பேரன் படுகாயம்
டூ -- வீலர் - கார் மோதி விபத்து தாத்தா பலி; பேரன் படுகாயம்
டூ -- வீலர் - கார் மோதி விபத்து தாத்தா பலி; பேரன் படுகாயம்
ADDED : ஜூலை 10, 2025 06:43 AM
திருச்செங்கோடு : நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த கோழிக்கால்நத்தம், ஈஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், 65, கட்டட மேஸ்திரி.
இவர், நேற்று மதியம், 2:00 மணிக்கு, தன் பேரன் ஜஸ்டின் கிருபாகரன், 12, என்பவருடன் காய்கறி வாங்க சென்றார். செம்பாம்பாளையம் அருகே, சாலையோரம் டூ - வீலரை நிறுத்தி, அதில் அமர்ந்தபடி, அங்கிருந்த கடையில் காய்கறி வாங்கினர்.
அப்போது, மல்லசமுத்திரத்திலிருந்து, திருச்செங்கோடு நோக்கி வந்த, 'ஆம்னி' வேன், டூ - வீலர் மீது மோதியது. இதில், டூ - வீலரில் இருந்து துாக்கி வீசப்பட்ட வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேரன் படுகாயமடைந்தார்.
மேலும், ஆம்னி வேன் டிரைவர் சண்முகம், 60, அதில் வந்த அங்குராஜ், 65, நாகலட்சுமி, 55, ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள், அனைவரையும் மீட்டு, திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.