ADDED : ஜூலை 16, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த வள்ளிமதுரை பஸ் நிறுத்தம் அருகில், டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில் சாக்குபையில் மது வகைகளை கடத்திச்-சென்ற கெளாப்பாறையை சேர்ந்த காமராஜ், 56, என்பவரை அரூர் போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 12,096 ரூபாய் மதிப்-புள்ள, 100 மதுபாட்டில்கள் மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்-பட்டது. அதே போல், பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் எடுத்து சென்ற, 12,338 ரூபாய் மதிப்புள்ள, 102 மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.