/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அக்காவுடன் கள்ளத்தொடர்பால் தம்பியை தீர்த்துக்கட்டிய மாமா
/
அக்காவுடன் கள்ளத்தொடர்பால் தம்பியை தீர்த்துக்கட்டிய மாமா
அக்காவுடன் கள்ளத்தொடர்பால் தம்பியை தீர்த்துக்கட்டிய மாமா
அக்காவுடன் கள்ளத்தொடர்பால் தம்பியை தீர்த்துக்கட்டிய மாமா
ADDED : ஜூலை 02, 2025 02:15 AM
வாழப்பாடி, அக்காவுடன் கள்ளத்தொடர்பு வைத்த தம்பியை, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மாமா உள்பட, 2 பேரை, போலீசார் கைது
செய்தனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி, அத்தனுார்பட்டிபுதுாரை சேர்ந்த, கூலித்தொழிலாளி முனியன், 46. இவர் கடந்த பிப்., 15ல் மாயமானார். அவரது மனைவி செல்வி புகார்படி, வாழப்பாடி போலீசார், முனியனை தேடினர். விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டு, உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது தெரிந்தது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம், முனியனின் அக்கா கணவரான, விவசாயி வெங்கடேஷ், 57, அவரது நண்பரான, விவசாயி சேகர், 48, ஆகியோரிடம் விசாரித்தனர். அதில் முனியனை கொன்றது உறுதியானது. இதனால் இருவரையும், நேற்று போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
முனியனின் இரு அக்காக்கள் ராணி, நீலா. இந்த இருவரையும், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் திருமணம் செய்துள்ளார். ஆனால் நீலாவுக்கும், அவரது தம்பி முனியனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் நீலாவை, கணவர் வெங்கடேஷ் கண்டித்துள்ளார். தொடர்ந்து உறவினர்கள், ஊர் முக்கிய பிரமுகர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும் கள்ளத்தொடர்பு தொடர்ந்தது.
முனியன் வீடு முன் உள்ள கொட்டாயில்தான், சில ஆண்டாக முனியனும், நீலாவும் ஒன்றாக மது அருந்தி வசித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், முனியனை கொல்ல திட்டமிட்டு, நண்பர் சேகரிடம் உதவி கேட்டார். பின் கடந்த பிப்., 15 இரவு, 8:00 மணிக்கு சேகர், முனியனை மது அருந்த அழைத்துச்சென்றார். தொடர்ந்து சேகர் தகவல்படி, இரும்பு கம்பி, சாக்கு உள்ளிட்டவற்றை, வெங்கடேஷ், அங்கு கொண்டு வந்துள்ளார். முனியன் மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவரது பின் தலையில், வெங்கடேஷ் பலமாக அடித்துள்ளார். தொடர்ந்து கழுத்திலும், கம்பியால் தாக்க, சம்பவ இடத்தில் முனியன் இறந்தார்.
தொடர்ந்து அவரது உடலை துாக்கி சென்று, அத்தனுார்பட்டிபுதுாரில் உள்ள மயானத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் புதைத்தனர். பின் இருவரும், முனியனின், ஸ்பிளண்டர்' பைக்கை ஓட்டிச்சென்று, துக்கியாம்பாளையத்தில் உள்ள நீலப்பள்ளா ஓடை அருகே பயன்பாடற்ற கிணற்றில் பைக்கை போட்டு, தடயங்களை அழித்தனர்.
முனியனின் சடலத்தை, வெங்கடேஷ் கண்காணித்து வந்தார். ஒன்றரை மாதங்களுக்கு பின் அந்த மயானத்தில், அப்பகுதியை சேர்ந்த பெண்ணின் சடலம் எரிந்து கொண்டிருந்தபோது, அந்த தீயில், முனியனின் உடலை துாக்கி
வீசி, வெங்கடேஷ் எரித்துள்ளார். இருவரும் அளித்த வாக்குமூலப்படி, கிணற்றில் கிடந்த பைக்கை, கயிறு மூலம் மீட்டு, கொலைக்கு பயன்
படுத்திய இரும்பு கம்பிகளையும் கைப்பற்றி, வெங்கடேஷ், சேகரை கைது செய்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.