/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வத்தல்மலையில் சுகாதாரமற்ற குடிநீரால் சளி, இருமல் பாதிப்பு
/
வத்தல்மலையில் சுகாதாரமற்ற குடிநீரால் சளி, இருமல் பாதிப்பு
வத்தல்மலையில் சுகாதாரமற்ற குடிநீரால் சளி, இருமல் பாதிப்பு
வத்தல்மலையில் சுகாதாரமற்ற குடிநீரால் சளி, இருமல் பாதிப்பு
ADDED : நவ 05, 2024 01:19 AM
தர்மபுரி, நவ. 5-
தர்மபுரி மாவட்ட மக்களின், 'மினி ஊட்டி' என்று அழைக்கப்படும் வத்தல்மலை, தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 25 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு ஒன்றியங்காடு, பால்சிலம்பு, பெரியூர், நாயக்கனுார், சின்னங்காடு உட்பட, 7 மலை கிராமங்களில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த மாதம் பெய்த தொடர் மழையால், சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய் தொற்று பரவல்
அதிகரித்தது.
இது குறித்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் கவுரிசங்கர் கூறுகையில், ''மழைக்காலத்தில் பரவக்கூடிய டெங்கு, மலேரியா, டைப்பாய்டு, வைரஸ் காய்ச்சல், வத்தல்மலையில் இல்லை. சளி, இருமல் பாதிப்புகள் மட்டும் அதிகமாக உள்ளது. காரணம், சுகாதாரமற்ற குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்துவது தான். வத்தல்மலையிலுள்ள, 7 கிராம மக்கள் கிணறு, நீரோடை, தடுப்பணை, குளத்திலுள்ள நீரை குடிநீராகவும், குளிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், மழை காலத்தில் நோய் தொற்று எளிதில் பரவுகிறது. இதை தவிர்க்க, பொதுமக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் சுத்தமான மற்றும் காய்ச்சிய குடிநீரை பயன்படுத்தினால், நோய் தொற்று பாதிப்பிலிருந்து முழுவதும் விடுபட வாய்ப்புள்ளது,'' என்றார்.