ADDED : நவ 25, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பாரப்பட்டி,: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த, கரியப்பனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த, 19 அன்று மாலை, கணித சிறப்பு வகுப்புகள் முடிந்த பின், பள்ளியின் அறைகள் மற்றும் கேட்டை ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றனர்.
மறுநாள், 20 அன்று காலை பள்ளிக்கு வந்து பார்த்தபோது, கேட்டின் பூட்டு மற்றும் கணினி அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, அறையில் இருந்த, 6 பேட்டரிகள், ஒரு யு.பி.எஸ்., ஆம்ப்ளிபையர், மைக் உள்ளிட்டவை திருட்டு போனது தெரியவந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ரமாமதி அளித்த புகார் படி, பாப்பா-ரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.