/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
/
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
ADDED : டிச 08, 2025 08:00 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையிலுள்ள, தீர்த்தகிரீஸ்-வரர் கோவிலுக்கு தமிழகம் மற்றும் இந்தி-யாவின் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: தீர்த்தகி-ரீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராட, மலையின் கீழ்பகுதியில், 21 குளங்கள் இருந்தன. இதில், குளித்த பின், மலைக்கோவி-லுக்கு சென்று, அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீரா-டுவது மரபாக இருந்தது. இந்நிலையில், தீர்த்தம-லையில் பெரிய குளம் மட்டுமே இன்றளவும் உள்ளது. ஒரு குளம் அழிக்கப்பட்டு, பஸ்
ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குளங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் செய்யப்-பட்டுள்ளன. எனவே, வருவாய்த்துறை சார்பில், அனைத்து குளங்களையும் சர்வே செய்து, ஆக்கி-ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.