/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போலீஸ் கையை கடித்த தொண்டர் த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் 'ஷாக்'
/
போலீஸ் கையை கடித்த தொண்டர் த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் 'ஷாக்'
போலீஸ் கையை கடித்த தொண்டர் த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் 'ஷாக்'
போலீஸ் கையை கடித்த தொண்டர் த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் 'ஷாக்'
ADDED : டிச 08, 2025 05:20 AM

பாலக்கோடு: பாலக்கோட்டில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கூடத்தை முற்றுகையிட முயன்ற போது, அதை தடுத்த போலீஸ்காரரின் கையை, த.வெ.க., தொண்டர் ஒருவர் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மண்டி அருகே நவ., 22ல் அரசு டாஸ்மாக் கடை அருகில், புதிதாக மதுக்கூடம் திறக்கப்பட்ட து. இதை கண்டித்தும், டாஸ்மாக்கை மூட வலியுறுத்தியும், தர்மபுரி மாவட்ட த.வெ.க., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, த.வெ.க.,வினர் அந்த மதுக்கூடத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால் பாதுகாப்பு பணியிலிருந்த பாலக்கோடு போலீசார் தடுத்தனர்.
இதில், ஆத்திரமடைந்த த.வெ.க., தொண்டரான மகேந்திரமங்கலம் அடுத்த வீரசானுார் ஜெமினி, 23, பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர் அருண் கையை, 'நறுக்'கென கடித்தார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட, 16 பெண்கள் உட்பட 103 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தலைமை காவலரின் கையை கடித்த தொண்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை .

