/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் குழாய் உடைத்தவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
குடிநீர் குழாய் உடைத்தவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குடிநீர் குழாய் உடைத்தவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குடிநீர் குழாய் உடைத்தவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 08, 2025 02:58 AM
நல்லம்பள்ளி, :நல்லம்பள்ளி அடுத்த, பாகலஹள்ளி பஞ்., உட்பட்ட கெங்களாபுரம், சவுளுர், சேமன்கொட்டாய் உட்பட, 3 கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கபட்டு வந்தது. கெங்களாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களின் கழிவுநீரை, மழை காலங்களில் அவ்வப்போது, அருகிலுள்ள நீரோடையில் திறந்து விடுவதால், குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து நோய்தொற்று ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
நேற்று தனியார் நிறுவனத்தின் கழிவுநீரை நீரோடையில் விட, பொக்லைன் மூலம், குழி தோண்டி, சிமென்ட் பைப் லைன் அமைத்தனர். அப்போது, அங்கிருந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை உடைத்து சேதப்படுத்தினர். இதில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. மேலும், குடிநீர் குழாய் சேதத்தால், 3 கிராமங்களுக்கான குடிநீர் வசதி துண்டிக்கபட்டுள்ளது. இதில், குடிநீர் குழாய் சேதம் மற்றும் நீரோடையில் கழிவுநீர் கலக்கும் தனியார் நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.