ADDED : அக் 23, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சேர்வராயன் மலை அடிவாரத்தில், வாணியாறு அணை உள்ளது. இதற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள, சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு மலையின் பின்புற வடக்கு பகுதி பிரதான நீராதாரமாக உள்ளது. சில நாட்களாக சேர்வராயன் மலைத்தொடரில் கனமழையால், வாணியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 245 கன அடியாக அதிகரித்து, அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அந்த அணையின் மொத்த உயரம், 65.27 அடி. அதில் தற்போது, 50 அடியை நீர்மட்டம் கடந்துள்ளது. இதனால் அணையின் நேரடி பாசன பரப்பு பகுதி விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.