தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வரட்டாறு தடுப்பணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

வரட்டாறு தடுப்பணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

வரட்டாறு தடுப்பணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு


ADDED : அக் 24, 2025 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2025 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, சித்தேரி மலையிலிருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால் தாதரவலசை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும்.

நேற்று முன்தினம் காலை தடுப்பணையின் மொத்த கொள்ளளவான, 34.5 அடியில், 5 அடிக்கு தண்ணீர் இருந்த நிலையில், அன்று பகல், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நான்கு மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால், வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து வரத்துவங்கியது. இதனால், தடுப்பணை நீர்மட்டம் கிடு கிடுவென

உயர்ந்தது.

நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 24 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஒரே நாளில், தடுப்பணையின் நீர்மட்டம், 19 அடி உயர்ந்தது. வினாடிக்கு, 560 கன அடி வீதம், தடுப்பணைக்கு நீர்வரத்து உள்ளதாக பொதுப்பணித்துறையினர்

தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us