/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வி.சி., கட்சியினர் ரயில்வே ஸ்டேஷனை முற்றுகை
/
வி.சி., கட்சியினர் ரயில்வே ஸ்டேஷனை முற்றுகை
ADDED : டிச 23, 2024 09:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: அம்பேத்கரை விமர்சனம் செய்த விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, தர்மபுரி மாவட்ட, வி.சி., சார்பில், நல்லம்பள்ளி அருகே உள்ள சிவாடி ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது.
தர்மபுரி சட்டசபை தொகுதி செயலாளர் சமத்துவன் தலைமை வகித்து பேசினார். இதில், கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதேபோல், பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷன் முன், நடந்த முற்றுகை போராட்டத்திற்கு பாலக்கோடு சட்டசபை தொகுதி பொறுப்பாளர் விஜயகுமார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

