/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வி.சி.,க்கள் காத்திருப்பு போராட்டம்
/
அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வி.சி.,க்கள் காத்திருப்பு போராட்டம்
அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வி.சி.,க்கள் காத்திருப்பு போராட்டம்
அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வி.சி.,க்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 30, 2026 04:48 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அருகே, நடூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுக்கோரி பி.டி.ஓ., அலுவலகத்திற்குள், வி.சி.,க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் கடத்துார் ஒன்றியம் தாளநத்தம் ஊராட்-சியில் உள்ள நடூர் கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு முறையான குடிநீர் வசதி, தெரு விளக்கு, குடியிருப்பு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்து, மழை காலங்களில் வசிக்க முடி-யாத நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் இடத்-திலும் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.இதையடுத்து நேற்று மதியம், 2:30 மணியளவில் பாப்பிரெட்-டிப்பட்டி தொகுதி, வி.சி., மாவ ட்ட செயலாளர் சென்ன
கிருஷ்ணன் தலைமையில், அக்கிராம மக்கள் பி.டி.ஓ., அலுவல-கத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைய-டுத்து, பி.டி.ஓ.,க்கள் சுருளிராஜன், செல்வன் ஆகியோர், நடூர் கிராமத்தில் நேரடி ஆய்வு செய்தனர். பின், தர்ணா போராட்-டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவ-டிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

