/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாளையம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு
/
பாளையம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு
பாளையம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு
பாளையம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு
ADDED : செப் 02, 2025 01:29 AM
தர்மபுரி:பாளையம் சுங்கச்சாவடியில், வாகனங்களுக்கான புதிய கட்டண உயர்வு, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் வழியாக செல்லும், தேசிய நெடுஞ்சாலை என்.எச்., 44 காஷ்மீர் முதல், கன்னியாகுமரியை இணைக்கும், மிக முக்கியமான சாலையாக உள்ளது. இச்சாலையின் வழியாக, நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள், தர்மபுரி அடுத்துள்ள பாளையம் சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன.
செப்., 1 முதல் பாளையம் சுங்கச்சாவடியில், கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணி முதல், புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதில், கார்கள் ஒரு முறை கடந்து செல்ல, 120 ரூபாயில் இருந்து, 125 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் பலமுறை பயணிக்க மாற்றமில்லாமல், 185 ரூபாய் என தொடர்கிறது. இலகுரக வணிக மோட்டார் வாகனங்களுக்கு, 215 ரூபாயிலிருந்து, 220 ரூபாய், கனரக வாகனங்களுக்கு, 425ல் இருந்து, 435 ரூபாய், பல அச்சு பொருந்திய வாகனங்களுக்கு, 685ல் இருந்து, 700 ரூபாய் என கட்டணம் உயர்ந்தப்பட்டுள்ளது. பல அச்சு பொருந்திய வாகனம் பல முறை பயணிக்க, 1,030ல் இருந்து, 1,050 என, 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று முதல், பாளையம் சுங்கச்சாவடியில், கார் மற்றும் பல அச்சு பொருந்திய வாகனங்களுக்கு, 5 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.