ADDED : ஜூன் 03, 2025 01:44 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை வி.ஏ.ஓ., (பொறுப்பு) ஹரிஸ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், தேன்கனிக்கோட்டை - ஜவளகிரி சாலையிலுள்ள ஆவின் குளிரூட்டும் மையம் அருகே, நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர். அவ்வழி யாக வந்த டிப்பர் லாரியில் சோதனை செய்த போது, தேன்
கனிக்கோட்டையிலிருந்து ஜவளகிரிக்கு உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 4 யூனிட் மண் கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
* சாலமரத்துப்பட்டி வி.ஏ.ஓ., சென்னகேசவன் மற்றும் அதிகாரிகள் கும்மனுார் கூட்ரோடு அருகே ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிராக்டரை சோதனையிட்டதில், ஒரு யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. கல்லாவி போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.