/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அடிப்படை வசதிகளின்றி வெள்ளையப்பன் கோவில்
/
அடிப்படை வசதிகளின்றி வெள்ளையப்பன் கோவில்
ADDED : டிச 23, 2024 09:43 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி - சேலம் மாவட்ட எல்லையில், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சவாடி கணவாய் பகுதியில், வெள்ளைப்பன் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சேலம், தர்மபுரி மாவட்டங்களில் இருந்து ஞாயிறு, புதன் கிழமைகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பஸ், லாரி, பைக் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் அங்கு நின்று, கோவிலில் பூஜை செய்து செல்கின்றனர்.
இங்கு பக்தர்களுக்கு குடிநீர் வசதி இல்லை. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, கடந்த, 2 ஆண்டுகளாக காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. பக்தர்கள் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. கழிவறை வசதி இல்லாததால் பெண்கள் அவதிப்படுகின்றனர். பக்தர்கள் பலி கொடுக்கும் ஆடு, கோழிகளை சமைக்கவும், சாப்பிடவும் வசதி இல்லை.
இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த பக்தர் சங்கர் கூறியதாவது: இக்கோவில் உண்டியலில் ஆண்டுதோறும், 3 லட்சம் ரூபாய் அளவுக்கு வசூல் ஆகிறது. அதில் கொஞ்சம் கூட கோவில் வளர்ச்சிக்கு செலவிடுவது இல்லை. சமீபத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைத்த ஆழ்துளை கிணற்றில், 20 லிட்டர் தண்ணீர் மட்டுமே வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம், ஹிந்து சமய அறநிலைத்துறையிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

