/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆட்டை கடித்து குதறிய சிறுத்தை அஞ்செட்டி கிராம மக்கள் அச்சம்
/
ஆட்டை கடித்து குதறிய சிறுத்தை அஞ்செட்டி கிராம மக்கள் அச்சம்
ஆட்டை கடித்து குதறிய சிறுத்தை அஞ்செட்டி கிராம மக்கள் அச்சம்
ஆட்டை கடித்து குதறிய சிறுத்தை அஞ்செட்டி கிராம மக்கள் அச்சம்
ADDED : நவ 30, 2024 02:15 AM
தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி அருகே ஆட்டை, சிறுத்தை கடித்து குதறிய நிலையில், கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை பஞ்.,க்கு உட்பட்ட சன்னத்குமார் நதிக்கரை, தனியார் லே அவுட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், குட்டியுடன் சிறுத்தை சுற்-றித்திரிகிறது. அதை பிடிக்க கூண்டு வைத்து, பல மாதங்கள் ஆன போதும் இதுவரை சிக்கவில்லை. அதேபோல், அன்னியாளம் பகுதியில் உள்ள கிரசர் பகுதியிலும் சிறுத்தை குட்டியுடன் சுற்றி வருகிறது. சூளகிரி-பேரிகை சாலையில், புளியரசி கிராமம் அருகே கடந்த, 17ல், சிறுத்தை குட்டியுடன் சாலையை கடந்து சென்றது.அதன் நடமாட்டத்தை கண்டறிய, செட்டிப்பள்ளி காப்புக்-காட்டில் வனத்துறை மூலம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று இடங்களில் சுற்றித்திரியும் சிறுத்தைகளால், கிராமப்புற மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை கண்டறிந்து பிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அஞ்செட்டி அடுத்த கடுகு நத்தம் அருகே மலைப்-பகுதியில், தசரதன், அவரது மனைவி முனியம்மா ஆகியோர் நேற்று முன்தினம் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது, புதரில் மறைந்திருந்த சிறுத்தை, செம்மறி ஆடு ஒன்றை தாக்கி, அதன் கழுத்து பகுதியை கடித்தது. இதை கவனித்த தசரதன், முனியம்மா ஆகியோர் கூச்சலிடவே, சிறுத்தை ஆட்டை விட்டு புதருக்குள் ஓடி தப்பியது. படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஆட்டை, அஞ்செட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் அஞ்செட்டி, கடுகுநத்தம் கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

