/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அடிப்படை வசதி ஏதுமின்றி தவிக்கும் பள்ளத்தாறன் கொட்டாய் கிராம மக்கள்
/
அடிப்படை வசதி ஏதுமின்றி தவிக்கும் பள்ளத்தாறன் கொட்டாய் கிராம மக்கள்
அடிப்படை வசதி ஏதுமின்றி தவிக்கும் பள்ளத்தாறன் கொட்டாய் கிராம மக்கள்
அடிப்படை வசதி ஏதுமின்றி தவிக்கும் பள்ளத்தாறன் கொட்டாய் கிராம மக்கள்
ADDED : ஏப் 17, 2025 07:27 AM
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சிக்கும், கூத்தப்பாடி பஞ்சாயத்திற்கும் இடையே கொய்யா மரத்துக்கிணறு, பள்ளத்-தாறன் கொட்டாய் என, 2 கிராமங்கள், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. இங்கு, 50க்கும், மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த, 200 பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியுமின்றி, 3 தலை-முறைகளாக மக்கள் வசிக்கின்றனர்.
சாலை வசதி இல்லாததால், குண்டும் குழியுமான கரடு, முரடான பாதையில், 4 கி.மீ., தொலைவிலுள்ள போடூர் வழியாக, பென்-னாகரத்திற்கு நடந்தே செல்லும் நிலை உள்ளது. குடிநீருக்கு ஆபத்தான ஆதிகிணறில், வாளியில் தண்ணீரை இறைத்து பயன்-படுத்தி வருகின்றனர். நிலமட்டத்தில் அமைந்துள்ள இந்த கிண-றுக்கு எந்தவித தடுப்பு சுவர் பாதுகாப்பும் இல்லாததால், தண்ணீர் இறைக்கும் போது பலர் தவறி கிணற்றில் விழுந்துள்ளனர்.
இங்கு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் இல்லா-ததால், தண்ணீர் வருவதே இல்லை. கிணற்று நீரை மட்டுமே நம்பி உள்ளனர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் வேண்டுமெனில், 1.50 கீ.மீ., நடந்து சென்று அரண்மனை பள்ளம் என்ற இடத்திலிருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
மின்கம்பம் இருந்தும், தெருவிளக்குகள் இல்லை. இதனால் யானைகள் வரும்போது மிகுந்த பீதியில் இருக்கும் நிலை ஏற்படு-கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்-வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், அப்பகுதி பென்னாகரம் பேரூராட்சியா அல்லது கூத்-தப்பாடி பஞ்சாயத்தில் வருகிறதா என தெரியாததால், எந்த அடிப்-படை வசதியும் செய்யாமல்
உள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக அப்பகுதிக்கு அடிப்-படை வசதியை செய்துதர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.