/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாக்காளர் சிறப்பு முகாம்களில் படிவம்-8 கிடைக்காமல் அவதி
/
வாக்காளர் சிறப்பு முகாம்களில் படிவம்-8 கிடைக்காமல் அவதி
வாக்காளர் சிறப்பு முகாம்களில் படிவம்-8 கிடைக்காமல் அவதி
வாக்காளர் சிறப்பு முகாம்களில் படிவம்-8 கிடைக்காமல் அவதி
ADDED : டிச 29, 2025 10:06 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளில், வாக்-காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வரைவு வாக்காளர் பட்டி-யலில் இடம் பெறாத தகுதியான வாக்காளர் மற்றும் முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் வசதிக்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 2,092 ஓட்டுச்சாவடி மையங்களிலும், நேற்று முன்தினம், நேற்று என இரு நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது.
ஆனால், பெரும்பாலான முகாம்களில் படிவம், 6 மற்றும் 7 மட்டுமே வழங்கப்பட்டது. முகவரி, புகைப்படம், புதிய வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் பதிவுகள் உட்பட பல்வேறு தகவல்களை மாற்றும் படிவம், 8 வழங்கப்படவில்லை.
இது குறித்து, வாக்காளர்கள் கூறியதாவது:
ஓட்டுச்சாவடி மையங்களில் பெரும்பாலான-வற்றில் படிவம், 8 விண்ணப்பம் வழங்கப்பட-வில்லை. பல வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக-ளுக்கு வந்து ஏமாற்றம் அடைந்தோம். ஆன்லைன் மூலமாக படிவம், 8ஐ டவுன் லோடு செய்து பூர்த்தி செய்து கொடுத்தால், சிறப்பு முகாமில் இருக்கும் அலுவலர்கள் வாங்குவ-தில்லை. வரும், 3 மற்றும் 4ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடப்பதாக, கலெக்டர் அறிவித்துள்ளார். அப்போதாவது படிவம், 8 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

