/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் தயார் நிலையில் ஓட்டுச்சாவடி மையங்கள்
/
அரூரில் தயார் நிலையில் ஓட்டுச்சாவடி மையங்கள்
ADDED : ஏப் 19, 2024 06:51 AM
அரூர் : அரூர் தொகுதிக்கு உட்பட்ட, ஓட்டுச்சாவடி மையங்களில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ளன.
தர்மபுரி மாவட்டம், அரூர் (தனி) தொகுதியில் மொத்தமுள்ள, 301 ஓட்டுச்சாவடிகளுக்கு, நேற்று பகல், 1:30 மணி முதல், அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து, ஆர்.டி.ஓ., மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வில்சன் ராஜசேகர் மேற்பார்வையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஈச்சர் வாகனங்களில், போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றுடன், பென்சில், பேனா, அழியா மை, வெள்ளை தாள், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கழிப்பறை, மின்சாரம், குடிநீர், நிழல் உள்ளிட்ட வசதிகள், ஓட்டுச்சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு வந்து விட்ட நிலையில், ஓட்டுச்சாவடி மையங்களில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

