/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மழைக்கு இடிந்து விழுந்த 3 வீடுகளின் சுவர்
/
மழைக்கு இடிந்து விழுந்த 3 வீடுகளின் சுவர்
ADDED : அக் 17, 2024 01:28 AM
மழைக்கு இடிந்து விழுந்த 3 வீடுகளின் சுவர்
பாப்பிரெட்டிப்பட்டி, அக். 17---
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மாரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பூவி. கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம், பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
இந்த மழைக்கு பூவியின் ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர், நேற்று காலை இடிந்து விழுந்தது. இதேபோன்று, நாரணாபுரம், கள்ளியூரை சேர்ந்த அங்கப்பன் மனைவி பேபி. இவருடைய ஓட்டு வீட்டின் கூரை, மழைக்கு இடிந்து விழுந்தது.
இதேபோல், பொம்மிடி வருவாய் உள் வட்டத்தில், கேத்திரெட்டிப்பட்டி அடுத்த வேப்பிலைபட்டியை சேர்ந்தவர்
செங்குட்டுவன். கூலித்தொழிலாளி. மண் சுவர்களால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். அப்பகுதியில் பெய்த மழையால், ஓட்டு வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதில் உயிர் சேதங்கள் இல்லை. பொருட்சேதங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய் துறையினர் சென்று, பார்வையிட்டு சேத மதிப்புகளை கணக்கெடுத்து வருகின்றனர்.