ADDED : ஜூன் 30, 2025 04:45 AM
ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, 50,000 கன அடியாக சரிந்துள்ளது.
கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால், காவிரியாற்றல் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கபினியில் அணையிலிருந்து, 30,000 கன அடி நீர், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, 21,463 கன அடி என, 51,463 கன அடி காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, 70,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 50,000 கன அடியாக குறைந்தது.
விடுமுறை தினமான நேற்று, ஒகேனக்கல்லுக்கு ஏரளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்களை, மடம் செக்போஸ்டிலேயே போலீசார் திருப்பி அனுப்பினர். காவிரி கரையோரத்தில், 'டிரோன்' கேமரா மூலம், ஒகேனக்கல் போலீசார், வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.