ADDED : நவ 15, 2026 01:25 AM
அ நிறம் | அளவு
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 2,000 கன அடியாக சரிந்தது
தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், தேன்கனிக்கோட்டை, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது, மழை பெய்வதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 3,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 2,000 கன அடியாக
சரிந்தது.
இதனால், ஒகேனக்கல்லில் ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து குறைந்து
கொட்டியது.
