கூட்டு தொழில்நுட்ப பதவிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி., எழுத்து தேர்வு
கூட்டு தொழில்நுட்ப பதவிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி., எழுத்து தேர்வு
ADDED : நவ 15, 2026 01:27 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேரடி நியமனம், கூட்டு தொழில்நுட்ப பதவிகளுக்கான தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர் சரவணன்,
தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேரடி நியமனம் கூட்டு தொழில்நுட்ப பதவிகளுக்கான (பட்டயம், ஐ.டி.ஐ. நிலை) தேர்வு, தர்மபுரி மாவட்டத்தில் இன்று (நவ., 15) காலை, 9:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை நடக்கவுள்ளது. இத்தேர்வை தர்மபுரி மாவட்டத்தில், 6 தேர்வு மையங்களில் மொத்தம், 1,886 தேர்வர்கள் எழுத உள்ளனர். அனைத்து தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
தேர்வு மையத்தின் நுழைவாயில்கள் காலை, 8:59 மணி வரை திறந்திருக்கும்.
உரிய நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு வந்து சேர வேண்டும். தேர்வர்கள் ஹால்டிக்கெட் மற்றும் அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டை ஆகியவற்றை கட்டாயம் உடன் கொண்டு வர வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன்பாக நுழைவாயில்கள் கட்டாயமாக
மூடப்படும்.
அனைத்து தேர்வு மையங்களிலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும், தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
