/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கே.ஈச்சம்பாடி தடுப்பணை கால்வாயை துார்வாரினால் கடைமடைக்கும் தண்ணீர்
/
கே.ஈச்சம்பாடி தடுப்பணை கால்வாயை துார்வாரினால் கடைமடைக்கும் தண்ணீர்
கே.ஈச்சம்பாடி தடுப்பணை கால்வாயை துார்வாரினால் கடைமடைக்கும் தண்ணீர்
கே.ஈச்சம்பாடி தடுப்பணை கால்வாயை துார்வாரினால் கடைமடைக்கும் தண்ணீர்
ADDED : நவ 07, 2025 12:44 AM
கம்பைநல்லுார், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது.
இதிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், ஈச்சம்பாடி, பெரமாண்டப்பட்டி, சாமண்டஹள்ளி, நவலை உள்ளிட்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 10 கிராமங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 22 கிராமங்கள் என, 32 கிராமங்களிலுள்ள, 6,250 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இந்நிலையில் வலதுபுற கால்வாய் மூலம் கடைமடைக்கு தண்ணீர் வருவதற்கு, அதை துார்வார, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: கே.ஈச்சம்பாடி தடுப்பணையின் வலதுபுற பாசன கால்வாய், 30 கி.மீ., நீளம் கொண்டது. இதன் மூலம், 3,250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், வலதுபுற கால்வாயில் செடிகள், முட்புதர்கள் அடர்ந்து, வாய்க்கால் மூடி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக கால்வாய் முறையாக துார்வாரப்படாததால், கடைமடை பகுதியான எம்.வெளாம்பட்டிக்கு தண்ணீர் வருவதில்லை.
இதனால், விவசாயிகள் முழுமையான விவசாயத்தை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எனவே, நடப்பாண்டிலாவது, வலதுபுற கால்வாயை துார்வாரி, கடைமடைக்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

