/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எருமியாம்பட்டியில் பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தல்
/
எருமியாம்பட்டியில் பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தல்
எருமியாம்பட்டியில் பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தல்
எருமியாம்பட்டியில் பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தல்
ADDED : நவ 06, 2025 12:52 AM
அரூர், அரூர்-சேலம் சாலையில், எருமியாம்பட்டி உள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மேலும், இப்பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நர்சிங், பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், திருவண்ணாமலை, வேலுார் உட்பட, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. எருமியாம்பட்டி பஸ் நிறுத்தத்தில், தனியார் மற்றும் அரசு புறநகர் பஸ்கள் நிற்பதில்லை. இதனால், வெளியிடங்கள், கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும், விடுமுறை நாட்களில் மாணவர்களை பார்க்க வரும் பெற்றோர்கள் கோபிநாதம்பட்டி கூட்ரோடு பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கி, பல கி.மீ., துாரம் நடந்து வரும் நிலையுள்ளது. எனவே, எருமியாம்பட்டியில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

