/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
/
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
ADDED : அக் 12, 2025 02:58 AM
கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் அருகே, கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இதிலி-ருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், ஈச்சம்பாடி, பெரமாண்டப்-பட்டி, சாமண்டஹள்ளி, நவலை உள்ளிட்ட தர்மபுரி மாவட்-டத்தை சேர்ந்த, 10 கிராமங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 22 கிராமங்கள் என, 32 கிராமங்களிலுள்ள, 6,250 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.இந்நிலையில், தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரால், கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நீர்வ-ரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் தடுப்பணைக்கு, 2,000 கன அடியாக இருந்த நீர்
வரத்து, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 4,500 கன அடியாக அதிகரித்து இருந்தது.
இதனால், கே.ஈச்சம்பாடி தடுப்பணையில், வெள்ளம் பெருக்கெ-டுத்து ஓடுகிறது. தென்பெண்ணையாற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்-வாகம் சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்-ளது.