/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நீர்வரத்து 1,600 கன அடியாக சரிவு
/
கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நீர்வரத்து 1,600 கன அடியாக சரிவு
கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நீர்வரத்து 1,600 கன அடியாக சரிவு
கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நீர்வரத்து 1,600 கன அடியாக சரிவு
ADDED : மே 23, 2025 01:35 AM
கம்பைநல்லுார், கம்பைநல்லுார் அருகே, கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 1,600 கன அடியாக குறைந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இதிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், ஈச்சம்பாடி, பெரமாண்டப்பட்டி, சாமண்டஹள்ளி, நவலை உள்ளிட்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 10 கிராமங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 22 கிராமங்கள் என, 32 கிராமங்களில் உள்ள, 6,250 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரால், கடந்த சில நாட்களாக கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தடுப்பணைக்கு, 2,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 1,600 கன அடியாக குறைந்தது. இருந்தபோதிலும், தடுப்பணைக்கு பொதுமக்கள் செல்ல, பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.