/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கெலவரப்பள்ளி அணையில் பாசனத்திற்கு 17ல் நீர் திறப்பு ரகசியமாக ஆய்வு செய்து திரும்பிய நீர்வளத்துறை செயலர்

ADDED : ஜூலை 15, 2025 01:35 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூலை மாதம், முதல்போக பாசனத்திற்கு வலது கால்வாயில், 26 கன அடி, இடது கால்வாயில், 62 கன அடி நீர் திறக்கப்படும். இதன் மூலம், ஓசூர், சூளகிரியிலுள்ள, 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இந்த ஆண்டுக்கான முதல்போக பாசனத்திற்கு வரும், 17ம் தேதி முதல், தொடர்ந்து, 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
ஓசூர், கெலவரப்பள்ளி அணை நீர்பிடிப்பு பகுதியான கர்நாடகா மாநிலத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வரும் நீரில், தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் அதிகளவில் சுத்திகரிக்காமல் திறந்து விடப்படுகிறது. அதனால், கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர் பாசனத்திற்கு உகந்ததாக இல்லை என, விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது.
முதல்போக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ள நிலையில், கெலவரப்பள்ளி அணைக்கு கழிவுநீர் கலந்து வருவது தொடர்பாக, நீரின் தரத்தை ஆய்வு செய்ய, நேற்று முன்தினம் வந்த, தமிழக நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், கெலவரப்பள்ளி அணை மற்றும் சொக்கரசனப்பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். இது குறித்து நீர்வளத்துறை தெரிவிக்காததால், கெலவரப்பள்ளி அணை நீரால், விவசாயம் பாதிப்பதை, நீர்வளத்துறை செயலாளரிடம் விவசாயிகளால் தெரிவிக்க முடியவில்லை.
இது குறித்து, பாசன விவசாயிகள் கூறுகையில், 'நீர்வளத்துறை செயலாளர், ரகசியமாக வந்து ஆய்வை முடித்து சென்று விட்டார். கழிவு நீர் வருவதை தடுக்க என்ன முயற்சி எடுக்க வேண்டும் என்பதை கூட விவசாயிகளிடம் அவர் ஆலோசிக்கவில்லை. இந்த ஆய்வால், விவசாயிகளுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை' என்றனர்.