/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.8.40 கோடியில் 623 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
ரூ.8.40 கோடியில் 623 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ரூ.8.40 கோடியில் 623 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ரூ.8.40 கோடியில் 623 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஜன 28, 2025 06:36 AM
அரூர்: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டிலுள்ள கொங்கு திருமண மண்டபத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். இதில், 8.40 கோடி ரூபாய் மதிப்பில், 623 பயனாளிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். தர்மபுரி எம்.பி., மணி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, 12.70 கோடி ரூபாய் மதிப்பில், சித்தேரி பஞ்.,க்கு உட்பட்ட வாச்சாத்தி முதல், அரசநத்தம் வன எல்லை வரையிலான கலசப்பாடி சாலை மற்றும் பாலம் அமைப்பதற்கு நடந்த பூமி பூஜையில் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையநத்தத்தில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., கொடியை அமைச்சர் பன்னீர்செல்வம் ஏற்றி வைத்தார். ஒன்றிய செயலாளர் சரவணன், பொம்மிடி நகர செயலாளர் கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.