/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.19.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
ரூ.19.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : டிச 22, 2024 01:26 AM
அரூர், டிச. 22-
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மருதிப்பட்டியில் நடந்த அரசு விழாவிற்கு, கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். இதில், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், 9.89 கோடி ரூபாய் மதிப்பில், 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 26.10 லட்சம் ரூபாய் மதிப்பில், 6 புதிய பஸ் நிழற்கூடங்கள் மற்றும், 2.66 கோடி ரூபாய் மதிப்பில், 8 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்தும் வைத்தார். தொடர்ந்து, 1,721 பயனாளிகளுக்கு, 19.58 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், ''அரூர் அடுத்த வாச்சாத்தியில் இருந்து கலசப்பாடிக்கு செல்லும் மலைப்பகுதியில், 12.75 கோடி ரூபாய் மதிப்பில், சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார்.
விழாவில், தி.மு.க., - எம்.பி., மணி, தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.