/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'சங்கடம் யாருக்கு இல்லை' தி.மு.க., - மா.செ., பேச்சு
/
'சங்கடம் யாருக்கு இல்லை' தி.மு.க., - மா.செ., பேச்சு
'சங்கடம் யாருக்கு இல்லை' தி.மு.க., - மா.செ., பேச்சு
'சங்கடம் யாருக்கு இல்லை' தி.மு.க., - மா.செ., பேச்சு
ADDED : ஜூன் 29, 2025 12:57 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூரில், 'ஓரணியில் தமிழ்நாடு' எனும் உறுப்பினர் சேர்க்கையை இணையதள செயலி மூலம் மேற்கொள்ள, தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி மூலம், அரூர் சட்டசபை தொகுதி ஓட்டுச்
சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜன்ட்டுகளுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
இதில், தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்து பேசிய
தாவது:
கூட்டத்திற்கு மூன்றில், ஒரு பகுதி தான் வந்துள்ளனர். ஒன்றிய செயலாளர்கள் சிலர் கலந்து கொள்ளவில்லை. இது எனக்காக அல்ல, கட்சிக்காக நடத்தப்படும் கூட்டம். வரும், 2026 தேர்தலில் அரூர் தொகுதியில் வெற்றி பெற கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். வரும், ஜூலை, 2ல் அரூர் சட்டசபை தொகுதியில் நடக்கும் ஒற்றுமை பேரணியில் கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும். இக்கூட்டம் குறித்த ரிப்போர்ட் தலைமைக்கு அனுப்புவேன். யாருக்கு சங்கடம் இல்லை. எல்லாருக்கும் சங்கடம் உள்ளது. எனக்கும் சங்கடம் உள்ளது. இருந்தாலும் இயக்கத்திற்காக, பொறுப்பை ஒப்படைத்த காரணத்திற்காக, இப்பணியை எவ்வளவு சங்கடம் இருந்தாலும், மனதிலே வைத்துக் கொண்டு, கழக தலைவருக்கு, உண்மை தொண்டனாக செயல்
படுவேன்.
இவ்வாறு, அவர் பேசினார்.
அதிருப்தியில் நிர்வாகிகள்
ரேஷன் கடை பணியாளர் நியமனத்தில், தாங்கள் பரிந்துரை செய்தவர்களுக்கு பணி வழங்காததால், ஒன்றிய செயலாளர்கள் வடக்கு வேடம்மாள், கிழக்கு சந்திர
மோகன், மேற்கு சவுந்தரராசன், மொரப்பூர் மேற்கு ரத்தினவேல் ஆகியோர் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும், தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறினர்.