நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூரில் பரவலான மழை
அரூர், அக். 11-
அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சித்தேரி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கம்பைநல்லுார் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, நேற்றும் காலை முதலே, அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. மாலை பள்ளி முடிந்து மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு சென்றனர். தொடர்மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.