/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை
/
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை
ADDED : நவ 07, 2025 12:59 AM
தர்மபுரி, தமிழகத்தில், தர்மபுரி உள்ளிட்ட, 9 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை, 5:00 மணி முதல், தர்மபுரி மாவட்டத்தில், அரூர், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் மழையில் நனைந்தபடி பள்ளி, கல்லுாரிக்கு மாணவ, மாணவியர் சென்றனர். மழையால் தாழ்வான வயல்களில் வெள்ள நீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதேஷ்ண நிலை நிலவியது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில், அதிகபட்சமாக தர்மபுரியில், 25 மி.மீ., மழை பதிவானது. அரூர், 16.40, பாப்பிரெட்டிப்பட்டி, 14, பென்னாகரம், 12, ஒகேனக்கல், 12, பாலக்கோடு, 10, நல்லம்பள்ளி, 10 மி.மீ., என மாவட்டத்தில் மொத்தம், 99.40 மி.மீ., மழையும், சராசரியாக, 11.04 மி.மீ., மழையும் பதிவானது.

