/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடும்ப தகராறில் மனைவி குத்திக்கொலை; கணவன் கைது
/
குடும்ப தகராறில் மனைவி குத்திக்கொலை; கணவன் கைது
ADDED : செப் 28, 2024 03:48 AM
வேலுார்: வேலுார் அருகே குடும்ப தகராறில் மனைவியை குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த முடினாம்பட்டு, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாலகிருஷ்ணன், 36, இவரது மனைவி சசிகலா, 34, இவர்களுக்கு, 10 வயதில் ஒரு மகள், 7 வயதில் ஒரு மகன் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில், பாலகிருஷ்ணன், கடந்த சில மாதங்களாக மன நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை, மீண்டும், கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில், 2 பேருக்கும் இடையே
வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி சசிகலாவை வயிற்றில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் கதறியடி சரிந்து கீழே விழுந்த பலியானார். இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் பாலகிருஷ்ணனை செய்து விசாரித்து வருகின்றனர்.