/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மனைவிக்கு டார்ச்சர் நீதிமன்ற ஊழியர் கைது
/
மனைவிக்கு டார்ச்சர் நீதிமன்ற ஊழியர் கைது
ADDED : நவ 08, 2024 01:11 AM
நீதிமன்ற ஊழியர் கைது
தர்மபுரி, நவ. 8-
தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்தவர் இளங்கேவன், 27. இவர், பாலக்கோடு நீதிமன்றத்தில் கடை நிலை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருப்பூர் அடுத்த இடும்பன்பாளையத்தை சேர்ந்த கவுரி, 25, என்பவருக்கும் காதல் ஏற்பட்டு, ஓராண்டுக்கு முன் இருவருக்கும் திருமணம் நடந்தது. இளங்கோவன், கவுரியுடன் பாலக்கோடு திருவள்ளுவர் நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் கவுரி, 2 மாத கர்ப்பம் தரித்திருந்த நிலையில், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், இளங்கோவன் சில நேரங்களில் கவுரியை அடித்தும் துன்புறுத்தி உள்ளார். இதனால் கவுரியின், கர்ப்பம் கலைந்துள்ளது. அவர் புகார் படி, பாலக்கோடு போலீசார் இளங்கோவனை கைது செய்தனர்.