/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காட்டுப்பன்றி தொல்லை: கவலையில் விவசாயிகள்
/
காட்டுப்பன்றி தொல்லை: கவலையில் விவசாயிகள்
ADDED : டிச 27, 2025 05:51 AM
அரூர்: அரூர் பகுதியில், விளை நிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள்
கவலையடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி மலை, கீழானுார், செல்லம்பட்டி, கீரைப்பட்டி, ஒடசல்-பட்டி, கூக்கடப்பட்டி, வாச்சாத்தி, தாமலேரிப்பட்டி, கீழ்மொரப்பூர், மருதிப்பட்டி, கூச்சனுார், கல்லடிப்-பட்டி, எம்.வெளாம்பட்டி பகுதிகளில் நெல், தக்-காளி, பயறு வகைகள், சிறு தானியங்கள், மரவள்-ளிகிழங்கு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகி-றது. விளைநிலங்களை ஒட்டி உள்ள வனப்பகு-தியில் காட்டுப்பன்றிகள் அதிகம் உள்ளது. இரவில் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள், விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்ப-டுத்துகிறது. இவைகளை கட்டுப்
படுத்த முடியாமல் விவசாயிகள் திணறுகின்-றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: காட்டுப்
பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையின் நடவ-டிக்கை இல்லை. காட்டுப்பன்றிகள் நடமாட்-டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை, நாங்கள் மேற்கொண்டால் வனத்துறையினர் வழக்கு போடுகின்றனர். பயிர்களை சேதப்படுத்துவதால் லட்சக்கணக்கில் பாதிப்படைகிறோம். சேதப்ப-டுத்தப்பட்ட பயிர்கள் குறித்து, வனத்துறையில் முறையாக புகார் மனு அளித்தாலும் இழப்பீடு வழங்கப்படுவதில்லை.
இவ்வாறு கூறினர்.

